/* */

அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை வெயில் தொடக்கம் மற்றும் விடுமுறையை முன்னிட்டு நேற்று அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

HIGHLIGHTS

அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

அகஸ்தியர் அருவியில், சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டனர். 

அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில், மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் (கோடை காலம் உட்பட) தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், இது ஒரு ஆன்மீக அருவியாக இருப்பதாலும், இங்கு தமிழகம் மட்டுமின்றி , வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளுத்து வாங்கும் கடும் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு , நேற்று விடுமுறை என்பதால் அகஸ்தியர் அருவிக்கு உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்கள், கார் , வேன்களில் தங்கள் குழந்தைகளுடன் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க குவிந்தனர்.

தொடர்ந்து அகஸ்தியர் அருவியில், தங்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக குளித்து வெயிலின் தாக்கத்திலிருந்து சுற்றுலா பயணிகள் தங்களை பாதுகாத்து கொண்டனர்.

கட்டணம் வசூலிப்பு

ஆனால், வனத்துறை மலை அடிவாரத்தில் உள்ள செக்போஸ்டில் தாராளமாக பொதுமக்களை அனுமதித்த போதும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் பின் உற்பத்தி நிலையம் அருகே தற்போது புதியதாக ஒரு செக் போஸ்ட்டை ஏற்படுத்தி குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் தலா ஒரு நபர் குளிக்க ரூபாய் 30- ம் வாகன கட்டணம் ரூபாய் 50, 100 என வசூல் செய்கிறார்கள். குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து பாபநாசம் வன விலங்கு சரணாலயம் அதிகாரியிடம்,: நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இரா ஆவுடையப்பன் ( முன்னாள் சபாநாயகர்), அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா, அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் எடுத்து கூறியும், இந்த கட்டண வசூல் உத்தரவு எங்கள் மேலதிகாரிகள் போட்ட உத்தரவு, என்று சர்வ சாதாரணமாக சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர்.

இலவசமாக கொட்டும் குற்றாலம் அருவிகளில் தனி நபரிடம் குளிக்க கூட கட்டணம் வசூல் செய்யாத நிலையில் அகஸ்தியர் அருவியில் மட்டும் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று சுற்றுலா பயணிகள் முணுமுணுத்து செல்வதை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் அருவிக்கு அருகே பெண்கள் குளித்து விட்டு துணி மாற்றும் அறைகள், சாலை வசதிகள் எல்லாம் ஊராட்சி மற்றும் எம்பி, எம்எல்ஏ , நிதியில் இருந்து தான் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 March 2023 1:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  2. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  3. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  4. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  5. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  6. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  7. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  8. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  10. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!