ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரத்தில் சிறுத்தை ஒன்று ஆட்டை தூக்கி சென்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
X

வேம்பையாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டிதுரை(25). இவர் தனது வீட்டில் கொட்டகை அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகைக்குள் நூழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆட்டை தூக்கி சென்றது. திடீரென இரவு நேரத்தில் ஆட்டின் சத்தம் தொடர்ந்து கேட்க வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது அங்கு கயிற்றில் கட்டி போட்டிருந்த ஆடு காணாமல் போனது தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் பாபநாசம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வேம்பையாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று ஆட்டை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது தெரிய வந்தது. வனப்பகுதிக்குள்ளிருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேம்பையாபுரம் மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 7 May 2021 1:58 AM GMT

Related News