அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

பொட்டல் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து சபாநாயகர் தெரிவித்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
X

 சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் பொட்டல் இ -சேவை மையம் அருகில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை, சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு  திறந்து வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் பொட்டலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் பொட்டல் இ -சேவை மையம் அருகில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலையில் (11.03.2022) திறந்து வைத்தார்.

பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய நலனில் அக்கறை கொண்டு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது முன்னால் முதலமைச்சர் கலைஞர். இத்திட்டத்தை இப்போது தான் பல மாநிலங்கள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

விவசாய திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்தான், இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு இன்னும் சிறப்பான பல திட்டங்களை தந்து இந்தியாவிலே விவசாய நலனில் அக்கறை கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கான நடப்பு பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 33 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் நெல்கொள்முதல் நிலையங்கள் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து நெல்லினை விற்பனை செய்து கொள்ள ஏதுவாக நேரடியாகவே அல்லது இ-சேவை மையம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் மூலமாகவோ ஆன்லைன்-ல் பதிவு செய்து பயனடைந்து கொள்ளலாம். கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2021-2022-ல் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு நெல்கிரேடு ஏ ரகம் குறைந்தபட்ச ரூ.1960 மற்றும் ஊக்கத்தொகை ரூ.100 ஆக மொத்தம் ரூ.2060 ஆகவும், நெல் பொது ரகம் குறைந்தபட்ச ரூ.1940 மற்றும் ஊக்கத்தொகை ரூ.75 ஆக மொத்தம் ரூ.2015 ஆகவும், அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நெல் கொள்முதல் பருவங்களில் திருநெல்வேலி மண்டலத்தில் 2018-19 ஆம் ஆண்டில் 50000 மெ.டன் நெல்லும், 2019-20 ஆம் ஆண்டில் 58000 மெ.டன் நெல்லும், 2020-21 ஆம் ஆண்டில் 95000 மெ.டன் நெல்லும், மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் கார் பருவத்தில் 20000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பு பிசானப் பருவத்தில் 80000 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ECS முறையில் வரவு வைக்கப்படும். விவசாயிகளுக்கு இன்று பொட்டலில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள 1500 ஏக்கர் விவசாய நில உரிமையாளர்கள் பயனடைவார்கள். என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மலையான்குளம் பகுதியில் உள்ள 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,993/- மதிப்பிலான் வேளாண்கருவிகளும், வீரவநல்லூர் பகுதியில் உள்ள 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,956/- மதிப்பிலான விவசாய பயன்பாட்டிற்கான தார்பாய்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, இணை இயக்குநர் வேளாண்மை இரா.கஜேந்திர பாண்டியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் (தரகட்டுப்பாட்டு) முனைவர் வி.ஜி.மணிகண்டன்,மாவட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சாலமன்டேவிட், கனகராஜ், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதைகுமார், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கிபாண்டியன், பொட்டல் ஊராட்சிமன்ற தலைவர் மாரிச்செல்வி, இராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்