கூனியூரில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்‌

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்‌

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூனியூரில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு  திட்ட விழிப்புணர்வு முகாம்‌
X

சேரன்மகாதேவி அருகே பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம்‌ நடைபெற்றது.

சேரன்மகாதேவி அருகே பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம்‌ நடைபெற்றது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்முகாமானது திருநெல்வேலி மாவட்டம்‌ கூனியூரில்‌ உள்ள ௯னியூர்‌ சமுதாய நலக்கூடம் வளாகத்தில்‌ நடைபெற்றது. இம்முகாமில் கதர் கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையத்தின்‌ உதவி இயக்குனர்‌ செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். பின்னர்‌ மாவட்ட தொழில் மையம் திட்ட மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கி மேலாளர் கிரேஸ்‌ ஜெயமொரின், மாவட்ட கதர்‌ மற்றும்‌ கிராம வாரியத்தின்‌ கண்காணிப்பாளர் மாரிமுத்து, மாவட்ட இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கி ஆர்செட்டி பயிற்சியாளர் தீனதயாளன், எம்.எஸ்.எம்.இ உதவி இயக்குனர் ஷெரினா பாபி, மதுரை கே.வி.ஐ.சி நிர்வாகி சரஸ்வதி ஆகியோர்‌ சிறப்புரை ஆற்றினர்.

பிரதம மந்திரியின்‌ வேலை வாயப்பு உருவாக்கும்‌ திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய அரசின்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ கதர்‌ மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ ஆனது தேசிய முகமையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில்‌ கதர் மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ கதர் மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ வாரியம்‌ மூலமாகவும்‌, கிராம மற்றும்‌ நகர்புறங்களில்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மற்றும்‌ கயிறு வாரியம்‌ மூலமாகவும்‌ செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்ச திட்ட மதிப்பீடாக உற்பத்திப்‌ பிரிவிற்கு 25 லட்சம்‌ ரூபாய்‌ மற்றும்‌ சேவை பிரிவிற்ரூ 10 லட்சம்‌ ரூபாய்‌ ஆகும்‌. உற்பத்திப்‌ பிரிவின்‌ கீழ்‌ 10 லட்சம்‌ ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைப்பிரிவின்‌ கீழ்‌ 5 லட்சம்‌ ரூபாய்க்கு மேற்பட்‌ட திட்டங்களுக்கும்‌ 8 ஆம்‌ வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலமாக www.kviconline.gov.in என்ற முகவரியில்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

மண்பாண்ட தொழிலாளர்‌ கூட்டமைப்பின்‌ நெல்லை மாவட்டத் தலைவர் ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Updated On: 2021-09-07T17:47:24+05:30

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  2. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  3. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  4. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  5. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  6. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்