பிசான பருவ சாகுபடி: மணிமுத்தாறு அணைலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைப்பு

சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பிசான பருவ சாகுபடி: மணிமுத்தாறு அணைலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைப்பு
X

பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து இன்று சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

விவாசாய பெருமக்களின் கோரிக்கையை எற்று தமிழ்நாடு முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட பிறபித்த ஆணையின்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் இன்று (04.12.2021) திறந்து வைத்தார்கள்.

பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து நடப்பாண்டிற்கான 2021-2022ம் ஆண்டு முன்னுரிமை பகுதியான 1வது மற்றும் 2வது ரீச்சுகளின் சார்ந்த 11,134 ஏக்கர் மறைமக பாசன பரப்புகளுக்கு 04.12.2021 முதல் 31.03.2022 வரை அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி முதல் தேவைக்கேற்ப 444 கன அடி தண்ணீர் 118 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு செய்வதற்காக நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும்.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும். மேலும் தாமிரபரனி பாசனத்திற்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்தில் உள்ள தண்ணீர் தேவைபட்டால் விதிமுறைகளின்படி செயல்படுத்தபடும். எனவே விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி உயரிய மகசூல் பெறவும், நீர் விநியோக பணியில் பொதுபணித்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாலமன் டேவிட், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், தாமிரபரணி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர்கள் முருகன், வினோத்குமார், மகேஷ்வரன், சிவகணேஷ்குமார், இளநிலை பொறியாளர் மாரியப்பன், அம்பாசமுத்திரம் வட்டாச்சியர் வெற்றிசெல்வி, மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 8:23 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
 2. லைஃப்ஸ்டைல்
  பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
 3. ஈரோடு
  பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
 6. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 7. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 8. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
 9. குமாரபாளையம்
  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 10. விழுப்புரம்
  இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்