/* */

முக்கூடலில் பொருநை விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதியில் மாணவ- மாணவிகள் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

முக்கூடலில் பொருநை விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்,மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை மாவட்டம் முக்கூடலில் பொருநை விழிப்புணர்வு முகாம். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்து மாலையம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் வைத்து பொருநை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மற்றும் முக்கூடல் பேரூராட்சித் தலைவர் ராதா, மற்றும் துணைத் தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மாரி வண்ணமுத்து, சொக்கலால் மேல்நிலை பள்ளி உதவித் தலைமையாசிரியர் காண்டீபன் மற்றும் முக்கூடல் பாப்பாக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொருநை நதி பாதுகாப்பது குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது. கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்- மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On: 25 April 2022 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்