Begin typing your search above and press return to search.
கொரோனா எதிரொலி -கோவில் தேரோட்டங்கள் ரத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற உலகாம்பிகை சமேத பாபநாசர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி காலை கொடியேற்றதுடன் துவங்கியது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பாபநாசம் கோவில் தேரோட்டம் தற்போது ரத்து செய்யபட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில்களிலும் முக்கிய நிகழ்வான அங்கப்பிரதட்சணம் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.