/* */

பாபநாசம், காரையார் அணையில் குறைந்த நீர் இருப்பு

பாபநாசம், காரையார் அணையில் குறைந்த நீர் இருப்பு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் காரையார் அணையில் 105 அடி நீர் இருப்பு உள்ளதால் தண்ணீர் சிக்கனம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள காரையார் சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் உள்ளது .முறையே 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையில் தற்போது 105 .45 அடி இருப்பு உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 104. 45 கன அடி, 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 94.40 அடி நீர் இருப்பு உள்ளது.200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது ஆனால் அணைக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் தேவைக்கும் இந்த அணை பயன்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு காரையார் அணை நீர்மட்டம் 105 அடி மிகையாகவே உள்ளது. இந்த ஆண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் போதிய அளவில் உள்ளது. மேலும் மூன்று போகம் நெல் பயிர் விளையும் அளவிற்கு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தி தர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 April 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்