ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: வியாபாரிகள் சாலை மறியல் பாேராட்டம்

நெல்லை அருகே முக்கூடலில் ஓட்டலில் பார்சல் வழங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த நபர் ஊழியரை சரமாரி வெட்டி விட்டு தப்பியோட்டம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: வியாபாரிகள் சாலை மறியல் பாேராட்டம்
X

முக்கூடலில் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன். இவர் முக்கூடலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் உணவு பார்சல் கேட்டு வந்துள்ளனர். ஒட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பார்சல் உணவு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் ஒட்டலுக்குள் புகுந்து கடையை சூறையாடியதுடன், ஒட்டல் ஊழியர் சகாயபிரவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஒட்டல் ஊழியர் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் முக்கூடல் பகுதியில் கடைகளை அடைத்து குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளுடன், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் வியபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 21 Aug 2021 3:34 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 2. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 3. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 4. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 6. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 7. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 8. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 9. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 10. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…