Begin typing your search above and press return to search.
அம்பாசமுத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைவு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா முன்னிலையில் அமமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மற்றும் கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் அம்பை நகர செயலாளர் இசக்கி முத்து பாண்டியன் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர் பொன் ஸ்டாலின் தலைமையில் சுமார் 200க்கு மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அதிமுகவில் இணைந்தனர்.