தொகுதி பிரச்சனை: நகராட்சி ஆணையாளருடன் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை
தொகுதி பிரச்சனை குறித்து, அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஆணையாளருடன், எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை செய்தார்.
HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளருடன் ஆலோசனை நடத்திய எம்எல்ஏ இசக்கி சுப்பையா.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளர் பார்கவியிடம், அம்பாசமுத்திரம் தொகுதி பிரச்சனைகள் பற்றி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை நடத்தினார். தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தேவைகளை தடையின்றி வழங்கிடவும், சாலைகளில் மழைநீர் தேங்காமல் நீரை உடனடியாக வடிகட்டிட தூரிதமாக செயல்படவும், எரியாத மின் விளக்குகளை எரியச் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, நகராட்சி ஆனையாளர் பார்கவி யிடம் தெரிவித்தார்.
அப்போது அதிமுக அம்பை நகர செயலாளர் அறிவழகன், நகராட்சி முன்னாள் துனைத்தலைவர் மாரிமுத்து, வழக்கறிஞர் சுரேஷ், கூட்டுறவு வங்கி துனைத்தலைவர் ப்ராங்கிளின், பார்வதி பாக்கியம், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், வக்கீல் ஸ்டாலின், சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.