/* */

சாலையில் கிடந்த பணம்- போலீசில் ஒப்படைத்த நேர்மை பெண்

சாலையில் கிடந்த பணம்- போலீசில் ஒப்படைத்த நேர்மை பெண்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையில் கிடந்த ரூ. 58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி முக்கூடல் காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு பரிசளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி வாட்டர் டேங்க் தெரு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் மாரியம்மாள் (19), என்பவர் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார். சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு மணிபர்ஸை எடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது அதில் 58,210 ரூபாய் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும், ஆதார் கார்டு இருப்பதை கண்டு முக்கூடல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அதை ஒப்படைத்துள்ளார்.

பின் மணிபர்ஸின் உரிமையாளர் சேரன்மகாதேவி காயிதேமில்லத் தெருவை சேர்ந்த ஜாஸ்மின் நிஷா என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் காவல் நிலையம் வந்து பணம் மற்றும் செல்போன்களை பெற்றுக் கொண்டார். மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் துறையினர் அப்பெண்ணை நேரில் அழைத்து குத்து விளக்கை பரிசாக அளித்தனர். மாரியம்மாளின் இச்செயலை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 22 April 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?