கனமழை எதிராெலி: நெல்லை மாவட்ட அணைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 28 அடி உயர்வு. முழு கொள்ளளவை நெருங்குவதால் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அணையில் நேரில் ஆய்வு. மழை நீடித்தால் நிலைமையை சமாளிக்க தயாராக இருப்பதாகவும், 127 பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பேட்டியில் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சம் பாபநாசம் அணை பகுதியில் 275 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் மலைப்பகுதியில் இருந்து அணையை நோக்கி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.

அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்கு தற்போது வினாடிக்கு 6530 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் வினாடிக்கு 1248 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் கொடுமுடியாறு, நம்பியாறு, சேர்வலாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர்ந்து மலைப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் எந்த நேரமும் அணை நிரம்பும் சூழல் உள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பாபநாசம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணையின் நீர்மட்டம் குறித்தும், நீர்வரத்து குறித்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறு அணைகளில் பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு மட்டும் அதிக நீர்வரத்து உள்ளது. தற்போதைக்கு நெல்லை மாவட்டத்தில் வெள்ள அபாயம் எதுவும் இல்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் நிலைமையை சமாளிக்க தயாராக இருக்கிறோம். கடந்த ஜனவரி மாதம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகள் நிரம்பியதால் ஒரே நாளில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பாபநாசம் அணை மட்டுமே நிரம்பி வருவதால் அணைகளின் நீர்மட்டம் கட்டுக்குள் உள்ளது என்றார்.

தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு கூறுகையில்:- பாபநாசம் அணைக்கு தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 88 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்புப் பணிகள் தயாராக உள்ளது. அதேபோல் 127 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் இன்று மழை பெய்யாவிட்டாலும் கூட அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் அணைகளில் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2021-10-18T17:00:50+05:30

Related News