அம்பாசமுத்திரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
அம்பாசமுத்திரத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.
HIGHLIGHTS

அம்பாசமுத்திரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கிராம உதயம் கோபாலசமுத்திரம் மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து அம்பாசமுத்திரம் இந்து தொடக்க பள்ளியில் வைத்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சநதிரமோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் Dr.S.புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். இந்து தொடக்க பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
அர்விந்த் கண் மருத்துவமனை மருத்துவர் திவ்யா பாரதி கண் பரிசோதனை செய்தார். முகாமில் அர்விந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மாதவன் கிராம உதயம் மைய தலைவர்கள் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் மாலையம்மாள், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்ததில் 18 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.