அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினை கலைஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தயாரிக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினை கலைஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தயாரிக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினை கலைஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தயாரிக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இந்த சொப்பு சாமான்கள் மரத்தால் தயாரிக்கப்படுகின்றன. கண்கவரும் அழகிய இயற்கை வண்ணங்களாலும், நச்சு கலக்காத உட்பொருட்களை வைத்து தயாரிக்கப்படுபவை. நம்மில் பெரும்பாலோர் இந்த சொப்பு சாமான்கள், மரத்தினாலான குட்டிக்குட்டி சமையலறை பாத்திர பொம்மைகளுடன் நம்முடைய குழந்தை பருவத்தை கடந்திருப்போம்.


இந்த தனித்துவமான பொம்மைகள்தான் உலகறியச் செய்யும் புவிசார் குறியீட்டை பெற உள்ளன. என்னதான் பல இடங்களில் இந்த சொப்பு சாமான்கள் தயாரிக்கப்பட்டாலும், அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் மிகவும் பிரபலமானவை. இன்னும் சிலர் வீடுகளிலும் இந்த சொப்பு சாமான்களை காண முடியும். அவை, அவற்றின் தரம் மற்றும் வண்ணங்களுக்கு பெயர் போனவை. ஆண்டு முழுவதும் இந்த அழகழகான சொப்பு சாமான்கள் சந்தைகளில் விற்கப்பட்டாலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பொம்மைகளின் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி கொலுவின் போது பிரதான விற்பனையை சந்திக்கின்றன.

இப்படி மரத்தாலான பொம்மைகளின் சந்தை இப்போது மாற்றங்கள் கண்டுள்ளன. பல பல புதுமையான வடிவங்களில் மினியேச்சர் பொம்மைகள் வந்தாலும், தரத்திற்கும், நச்சு கலக்காத தன்மைக்கும் சாட்சியாகவும் பாரம்பரிய முறையில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு இன்றும் தனி மவுசு உண்டு. இவை இயற்கை வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவை என்பதால் இந்த சொப்பு சாமான்கள் மறுசுழற்சி செய்யக்கூடியவை.

தாழம்பூ இலைகள், பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் போன்ற இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் அவை நச்சுகள் கலக்காத பொம்மைகளாகின்றன. சொப்பு சாமான்களுடன் குழந்தைகள் விளையாடும்போது அதை தவறுதலாக அவர்கள் கடித்துவிட்டாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும் என்கின்றனர் அவற்றை தயாரிக்கும் கைவினை கலைஞர்கள்.


தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற நவராத்திரி கொலுவில் சிறப்பு பூஜைக்காக கடவுள் பொம்மைகளையும் இக்கைவினை கலைஞர்கள் தயாரிக்கின்றனர். மரத்தினாலான சொப்பு சாமான்கள் மற்றும் நூற்பு பொம்மைகளின் மினியேச்சர் வடிவங்களை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல், மரத்தினாலான நகை பெட்டிகள் மற்றும் குழந்தைகள் விளையாடக்கூடிய ரயில்கள், விமானங்கள் போன்ற பொம்மைப் பொருட்களையும் வடிவமைப்பதில் சிறந்து விளங்குகின்றனர்.

Updated On: 30 July 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்