Begin typing your search above and press return to search.
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு, இலவச ஆடுகள் வழங்கல்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு, 500 இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு, 500 இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 பஞ்சாயத்துக்களை சேர்ந்த 100 ஏழை- எளிய பெண்களுக்கு தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் தலா 5 ஆடுகள் வீதம், 500 ஆடுகள் இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை சசிகுமார், துணைத்தலைவர் மாரி வண்ணமுத்து, கால்நடை உதவி இயக்குனர் தங்கராஜ், கால்நடை மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், முயல்வி ஆகியோர் உட்பட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பயனாளிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.