முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட சோலார் படகு வாங்கியதிலும், பாபநாசம் கயல் பூங்கா அமைத்ததிலும் கோடிக்கணக்கில் பணம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

முண்டந்துறை புலிகள் காப்பகம்.

நெல்லை:முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தொடரும் முறைகேடுகள் நடவடிக்கை எடுக்க வன உயிரினஆர்வலர்கள் கோரிக்கை.முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு சரகபகுதிகளில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக மணிமுத்தாறு அணையில் விட வனத்துறைசார்பில் 60 லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட சோலார் படகு சோதனை ஒட்டத்துடன் நிறுத்தப்பட்டது. படகு சோதனையின் போதே அணையின் நடுப்பகுதியில் பழுதாகிவிட்டது.

படகுவாங்கி ஒருவருடமாக அணைபகுதியில் பராமரிப்பு இன்றி நிறுத்தி வைத்தது மட்டுமல்லாது, அதிகவிலை கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுபோல் பாபநாசத்தில் அமைக்கப்பட்ட கயல் பூங்காவிலும் முறைகேடு என பல வழிகளில் அரசு பணத்தை முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் வீணடித்துள்ளனர்.

முறையான விசாரணை நடைபெற்றால் பல அதிகாரிகள் இதில் சிக்குவார்கள். தற்போதைய அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள். இதுபற்றி வனத்துறையின் கருத்தை கேட்க பல முறை சென்றபோது அதிகாரி இல்லை. இப்போது நெல்லை அதிகாரிதான் பொறுப்பு. அவர் பீல்டுக்கு போயிருக்கிறார். அதனால் செல் போன் சிக்னல் கிடைக்காது என்ற பதில்கள் தான் கிடைத்தன. நடவடிக்கை எடுக்குமா, தமிழக அரசு?

Updated On: 9 July 2021 12:17 PM GMT

Related News