Begin typing your search above and press return to search.
பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

கோப்பு படம்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய விவசாய நெல் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று, வேளாண் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பிசான நெல்பயிரினை உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூபாய் 444 மட்டுமே. பிரீமியம் செலுத்த கடைசி நாள் 15.12.2021 ஆகும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுக வேண்டும் என்று, கேட்டு கொள்ளப்படுவதாக, என்று சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.