நெல்லை-அம்பாசமுத்திரம் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மர்மமான முறையில் இறப்பு
நெல்லை-அம்பாசமுத்திரம் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

அம்பாசமுத்திர வட்டார காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி சுதா. (பழைய படம்)
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த வட்டார காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி சுதா (வயது 45) பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அம்பாசமுத்திரம் போலீசார் கைரேகை நிபுணர் ஆனந்த், மகளிர் காவல் ஆய்வாளர் ராதா மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சைமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி நடத்தினர்.
இறந்து சுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பூட்டிய வீட்டிற்குள் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.