தாமிரபரணி பொருநை நதியில் தூய்மை படுத்தும் பணியினை தொடக்கி வைத்த ஆட்சியர்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி நதியை தூய்மையாக வைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி ஏற்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாமிரபரணி பொருநை நதியில் தூய்மை படுத்தும் பணியினை தொடக்கி வைத்த ஆட்சியர்
X

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பாபநாசத்தில் தாமிரபரணி பொருநை நதியினை தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பாபநாசத்தில் தாமிரபரணி பொருநை நதியினை தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி பொருநை நதியை தூய்மை படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பாபநாசம் தலை அணையையும் பார்வையிட்டார். இந்த நதியை தூய்மை படுத்துவதற்காக இப்பணியில் காவலர்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தாமிரபரணி நதியை தூய்மையாக வைப்பது தொடர்பான உறுதிமொழி தமிழ்நதியாம் பொருநை எனும் தாமிரபரணி நம் நெல்லைச்சீமையின் இரத்த ஓட்டம் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்கும் நீராதார அட்சயபாத்திரம் ஆக்கிரமிப்பின்றி, அசுத்தமின்றி அகண்ட பொருநையாக அத்தாயைக் காப்பது அதன் மக்களாகிய நமது கடமை. வற்றாத பொருநையாய், வளம் தந்து நிலைத்து நீடிக்க தூயபொருநை நெல்லைக்குப் பெருமை என்பதைச் செயல்படுத்த நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம் என உளமாற உறுதி ஏற்கிறோம். என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வனத்துறையினர், தன்னாவலர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர். பாபநாசத்தில் உள்ள கடைகாரர்கள், பூசாரிகள், தன்னார்வலர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது: பொருநை நதி ஒரு நாகரிகத்தை உருவாக்கியது. அப்பெயர்பட்ட பெருமைக்குரிய நதியை நாம் பாதுக்காக்க வேண்டும். தாமிரபரணி பொருநை நதியானது இந்த மலை பாதையிலிருந்து தரைபகுதியை தொடரும் இடம் பாபநாசம் ஆரம்ப பகுதி தூய்மையாக இருந்தால்தான் தாமிரபரணி செல்லும் இடங்கள் எல்லாம் தூய்மையாக இருக்கும். ஆகவே, பாபநாசம் ஆரம்ப பகுதியில் தாமிரபரணியை நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள பக்தர்கள் முதல் அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தாமிரபரணி தண்ணீரை குழிக்கும் தண்ணீரை குடிக்கும் தண்ணீராக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாபநாசம் பகுதியில் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைசெய்யப்படுகிறது. மேலும், இப்பகுதியில் குழிப்பவர்கள் துணிகளை போடுவதற்கும் தடைசெய்யப்படுகிறது. தாமிரபரணி நதியை பாதுகாக்க முதற்கட்டமாக பாபநாசம் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நதியை தூய்மையாக பாதுகாக்க முழு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆற்றில் இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், பூசாரிகள் கூறிய கருத்துகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தாமிரபரணி நதியை பாதுகாக்க நல்லதொரு நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு அதிமாக ஏற்படுத்தினாலும் ஒவ்வொருவரும் தன் மனதில் இந்த நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியான நிலைபாடு ஏற்பட்டால் மட்டுமே நாம் பொருநை நதியை மீட்டு உருவாக்கமுடியும். கோவிலில் வரும் பக்தர்களிடம் பூசாரிகள் குளித்துவிட்டு துணியை ஆற்றில் போடும்படி கூறக்கூடாது. பக்தர்களிடம் துணியை தண்ணீரில் போடக்கூடாது என விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

காவல்துறையினர், வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவ,மாணவியர்கள் தாமிரபரணியில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். நதியின் பெருமை குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பெருநை எனது பெருமை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து முக்கூடல் ஆற்றங்கரை பகுதியில் மரகன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், விக்ரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் சுரேஷ் செல்வ பெருமாள், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் குழு மேம்பாட்டு அலுவலர் அன்பு, நகர்மன்ற துணை தலைவர் திலகா, 12வது பட்டாளியன் தலைவர் கார்த்திகேயன், வி.கே.புரம் நகராட்சி ஆணையாளர் கே.ஏ.கண்மணி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிசெல்வி, மாவட்ட ஆய்வு அலுவலர் க.செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
 3. தமிழ்நாடு
  ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
 4. தமிழ்நாடு
  அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
 5. உடுமலைப்பேட்டை
  அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
 7. தாராபுரம்
  தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
 8. திருப்பூர்
  திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
 10. காஞ்சிபுரம்
  வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி