அம்பாசமுத்திரம், பாபநாசம் கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோவில் மற்றும்வனப்பகுதியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோவில் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் அகஸ்தியர் சிலை உட்பட கோவிலின் பல பகுதிகள் கடந்த மழை வெள்ளத்தில் சேதமடைந்தபகுதிகளையும் பார்வையிட்டார்.
விரைவில் அனைத்து பகுதிகளையும் சரிசெய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டார். பாபநாசம் கோவில் நிர்வாக அதிகாரியின் முறைகேடான நிர்வாகம்மற்றும் வனத்துறையினர் கெடிபிடிகளை பற்றி அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். நிகழ்வில்மாவட்ட ஆட்சிதலைவர் விஷ்ணு சப்கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னாள் சட்டபேரவை தலைவரும் திமுக மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பரணி சேகர் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கி.கணேசன் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் வருவாய் துறையினர்கலந்து கொண்டனர்.