Begin typing your search above and press return to search.
ஐந்தாவது நாளாக அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் 5 வது நாளாக தீவிர பிரசாரம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் ஐந்தாவது நாளான இன்று பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். திறந்தவெளி வேனில் நின்று கொண்டு வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, செண்டை மேளம் முழங்க, நடன கலைஞர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.