Begin typing your search above and press return to search.
நெல்லை:முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது.
HIGHLIGHTS

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிகேசவநல்லூர் பகுதியில் கடந்த 04.07.2021 அன்று பத்தல்மேடு பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற சரவணன்(36). முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த உதயகாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் பகவதி என்ற சரவணனை கொலை செய்த வழக்கில் பத்தல்மேடு பகுதியைச் சேர்ந்த பத்ரகாந்த்(19), ஐயப்பன்(38), மற்றும் வேலுச்சாமி என்ற துரை(39) ஆகிய மூன்று பேரை இன்று கைது செய்யபட்டுள்ளனர்.