Begin typing your search above and press return to search.
முக்கூடல் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, இவர் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் இன்று அவரை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறில் உறவினர்களே கொலை செய்து இருக்கலாம் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது, மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.