/* */

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வாஷ் அவுட்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளஅனைத்து ஒன்றிய கவுன்சில்கள் வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்று அதிமுகவை வாட்ஸ்அவுட் செய்தது.

HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வாஷ் அவுட்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களை தனித்து வெற்றிப் பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைப் பிடித்தது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஒரு கவுன்சிலர் பதவியை கூட பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது வார்டு ஆகாஷ், 3வது வார்டு கஸ்தூரி, 4வது வார்டு சுடலைமுத்து, 5வது வார்டு ஞானக்கனி, 6வது வார்டு சரஸ்வதி, ஏழாவது வார்டு ராமலட்சுமி,எட்டாவது வார்டு இசக்கியம்மாள், ஒன்பதாவது வார்டு சிவனு பாண்டியன் ஆகிய எட்டு திமுகவினர் வெற்றி பெற்றனர். ஒன்னாவது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி பெற்றார்

Updated On: 12 Oct 2021 10:43 PM GMT

Related News