திருச்சி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கோரிக்கை தீர்மானம்

திருச்சியில்நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கோரிக்கை தீர்மானம்
X
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் அபிஷேகபுரம் பகுதி குழுவின் 25-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நிர்வாகிகள் கணேசன், கலைவாணி ,சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநாட்டை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். இந்த மாநாட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38, 39, 40, 41,42 ஆகிய வார்டுகளில் சமுதாயக் கூடங்கள் அமைக்க வேண்டும் ,பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், கோரையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும், கிராப்பட்டி சுரங்கப்பாதையில் உள்ள கழிவு நிறைவேற்ற வேண்டும், கருமண்டபம்- எடமலைப்பட்டிபுதூர் இணைப்புச் சாலையை அமைத்து கொடுக்க வேண்டும், நகரில் அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றி சாலைகளை சீர் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிவா நன்றி கூறினார்

Updated On: 14 Sep 2021 1:12 PM GMT

Related News