திருச்சி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் ஏழரை பவுன் நகை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருட்டு
X

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வீரமா தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி ஜான்சிராணி (வயது 34). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர் பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றார். அப்போது தனது கைப்பையில் ஏழரை பவுன் நகையை வைத்திருந்தாராம்.

இந்நிலையில் வீட்டுக்கு சென்று தனது கைப்பையை பார்த்தபோது, அதிலிருந்த நகையை காணவில்லை. அவர் பஸ்சில் வந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் நகை இருந்த கைப்பையை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஜான்சிராணி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 24 Sep 2021 6:15 AM GMT

Related News