/* */

திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் இன்று 2 பேர் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி .அலுவலகம் முன் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் இன்று 2 பேர் தீக்குளிக்க முயற்சி
X

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன்  தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜி செட்டியார் (வயது 71). இவருக்கு சொந்தமான 88 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ ஜி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீதும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ராஜு செட்டியார் தனது மைத்துனர் நடராஜனுடன் திருச்சியில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்திற்கு இன்று அதிகாலை வந்தார். நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் திடீரென 10 மணி அளவில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினர்.

இதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டதும் உடனடியாக ஓடி வந்து தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி வீசி இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஐ.ஜி .அலுவலகம் முன்பு இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  6. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  7. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  8. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  9. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  10. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்