/* */

10. 12ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் நிலை குறித்து கல்வி அமைச்சர் விளக்கம்

10, 12ம் வகுப்புக்கு தனிதேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

10. 12ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் நிலை குறித்து கல்வி அமைச்சர் விளக்கம்
X

திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில்  பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவ உபகரணங்களை சுகாதார துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர்.

அந்த நிகழ்ச்சி திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொருட்களை சுகாதார துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனி தேர்வர்களை கவனத்தில் கொண்டுள்ளோம் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது அவர்களுக்கு தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வருகின்றன அந்த ஆலோசனைகளை அடிப்படையிலும் சி.பி.எஸ்.சி எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து கலந்தாலோசித்து அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம்.அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் லேப்டாப்புகள் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.எனவே அந்த மாணவர்களுக்கும் சேர்த்து புதிதாதக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி டெப்லெட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது.இனி அவ்வாறு அந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் நிலுவைத்தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...