திருச்சி ரவுடி கொலை வழக்கில் 9 பேர் கைது

திருச்சியில் நேற்று நடந்த ரவுடி கொலையில் போலீசார் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி ரவுடி கொலை வழக்கில் 9 பேர் கைது
X

திருச்சி மதுரை ரோடு கல்யாணசுந்தர புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ரிஷாந்த் என்கிற நிஷாந்த் (வயது 21) கடந்த வருடம் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வந்திருந்தார்.

இந்நிலையில்நேற்று காலை ராமகிருஷ்ணா பாலம் அருகே குப்பாங்குளம் பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்து கிடந்த நிஷாந்த் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி, கொலை செய்த குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் வாமடம் பகுதியில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட வாழைக்காய் விஜி சம்பவத்தில் இறந்து போன நிஷாந்த் மற்றும் அவருடன் இருந்த நண்பர்கள் என்பதால், அந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக நடந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த தனியார் நிறுவனங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நிஷாந்தை கொலை செய்த குற்றவாளிகள் பதிவாகியிருந்தனர்.

அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடர்புடையதாக தென்னூர் வாமடம், குப்பாங்குளம், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஸ்டீபன் (வயது 21), சூர்யா (வயது 22), வெங்கடேஷ் (வயது 23), அரவிந்த் (வயது 21), வேலு என்கிற ராஜதுரை (வயது 25), குருமூர்த்தி (வயது 24), மணிகண்டன் (வயது 30), சுரேந்தர் (வயது 23) அமீர் (வயது 22) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Updated On: 2021-09-15T08:46:59+05:30

Related News