திருச்சி பள்ளி மாணவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் தியான பயிற்சி

திருச்சி பள்ளி மாணவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா தியான பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சி பள்ளி மாணவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் தியான பயிற்சி
X

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தியான பயிற்சி வகுப்பினை யோகா ஆசிரியர் விஜயகுமார் நடத்தினார்.

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் தியான பயிற்சி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் தியான பயிற்சி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார்.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி தலைமை வகித்தார்.பொருளாளர் ரங்கராஜன், இயக்குனர் லாவண்யா,உறுப்பினர் வளர்ச்சி குழு தலைவர் கார்த்திக், சோனா பிரபு டயாபட்டீஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் நிர்வாக அலுவலர் லீனா ரவீந்திரநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மனதை ஒருநிலைப்படுத்தும் தியான பயிற்சி குறித்து பேசினார்.

அவர் பேசுகையில் தியானம் மன அமைதியை மேம்படுத்துவதற்காகவும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்காகவும் தன்னை உணர்ந்து கொள்வதற்காகவும் செய்யப்படுகிறது. தியானிக்க பல வழிகள் உள்ளன, அதில் மூச்சை கவனிக்கும் தியானம் ஒரு வகை ஆகும்.

நிலப்பரப்பில் தரை விரிப்பான் மீது அமர்ந்து முதுகு மற்றும் கழுத்து பகுதியை நேராக வைத்து அமரவும். உடலை தளர்வாக வைத்துக் கொண்டு கண் இமைகளை மென்மையாக மூடி சுவாச இயக்கத்தை கவனிக்க வேண்டும். அப்பொழுது நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிகழ் கால உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்வது, வருத்தங்களைக் குறைப்பது, மனதை அமைதிப்படுத்துவது, கவலைப்படுவது, சூழ்நிலைக்குப் பதிலளிப்பது, எண்ணங்களை ஏற்றுக்கொள்வது, கடந்த காலத்தை மறந்துவிடுவது, யதார்த்தத்தில் கவனம் செலுத்துவது, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

இப்படி காலை, மாலை பதினைந்து நிமிடங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியினால் மனது பண்படும் பக்குவப்படும் மனது அமைதி அடையும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Updated On: 19 Sep 2023 6:31 AM GMT

Related News