வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
X
திருச்சி கலெக்டர் சிவராசு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் 31-ந் தேதி 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ்-2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து கடந்த டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவராவர்.

இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதி இல்லை.

பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது. இந்த தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சியின்மை ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றோர் ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 என தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து வகைமாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றோர் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பப்படிவத்தை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...