/* */

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
X

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா புதன்கிழமை, காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர் கோயிலில் இருந்து முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா சென்றார். தொடர்ந்து இரவு பூச்செரிதல் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம்.கே காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கையுடன் உலகநாதபுரம் கோயிலை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்.

தொடர்ந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வும், தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் மற்றும் மாலை 4 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை, காலை சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜையும், பகலில் மகா அன்னதானமும் பிற்பகலில் மாவிளக்கு பூஜையும், மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே 8 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோயிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச் சங்கத்தின் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் பொறுப்பாளர்கள் சண்முகம், மதியழகன், பால்ராஜ், ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Updated On: 6 May 2023 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...