திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு ,கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் ராகவேந்திரா வளைவு எதிரில் நடத்துவது.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை சிறப்பாகவும் விரைவாகவும் மேற்கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்ப்பது.
பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதா பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மீண்டும் அமைய பாடுபடுவது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.