/* */

திருச்சி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை வைத்தது யார்?

திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலையின் தலையில் இரும்பு கம்பியை வைத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை  வைத்தது யார்?
X

திருச்சியில் உள்ள பெரியார் சிலை (பைல் படம்)

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. 1967-ஆம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலைக்கு பெரியார் பிறந்த நாள், நினைவு நாள், பெண்கள் தினம் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

திருச்சியில் உள்ள பல்வேறு சிலைகளுக்கு பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்ட போது இந்த பெரியார் சிலைக்கும் இரும்பு கம்பிகளால் ஆன பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைக்கு அருகிலேயே மத்திய பஸ் நிலையம், புறக்காவல் நிலையமும் உள்ளது. இந்நிலையில் இந்த பெரியார் சிலையின் தலையில் யாரோ விஷமி ஒருவர் இரும்பு கம்பியை வைத்து விட்டு சென்றுள்ளார்.

இரண்டு நாட்களாக அந்த இரும்பு கம்பி அகற்றப்படாமல் இருந்தது. இதனை கேள்வியுற்று செய்தி புகைப்பட கலைஞர்கள் அதனை படமெடுத்து உள்ளனர். அப்போது இதனை கவனித்த திருச்சி மாநகர உளவு பிரிவு போலீசார் ஓடி வந்து அந்த இரும்பு கம்பியை பெரியார் சிலையின் தலையில் இருந்து அகற்றி உள்ளனர். இரும்பு கம்பி தடுப்பு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பையும் மீறி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை கொண்டு சென்று வைத்தது யார்? என்பது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...