/* */

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி ஆய்வு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிய அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி ஆய்வு
X

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி தொடர்பான விவரங்களை அமைச்சர் நேருவிடம் மாநகராட்சி நகர பொறியாளர் சிவபாதம் விவரித்தார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை இன்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு ஆகும். கடந்த ஆட்சிகளில் பல முறை இடம் தேர்வில் பிரச்சினை, ஐகோர்ட்டில் வழக்கு என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணி தாமதமாகி கொண்டே சென்றது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அடைந்த வெற்றியை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றார். அவர் முதல் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் நிகழ்ச்சியாக திருச்சிக்கு வந்து திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்ததோடு அதற்கான அடிக்கல்லையும் நாட்டிவிட்டு சென்றார். அத்துடன் இதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்தார்.

இதன்படி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி (Integrated Bus Terminal) மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் (Multi Utility Facilities Centre) ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி என ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான இடத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர். புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124 எண்ணிக்கை. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142 எண்ணிக்கை. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78 எண்ணிக்கை. ஆக மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் மொத்த எண்ணிக்கை 404. நகரப்பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 60.

இங்கு கட்டப்படவுள்ள் கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிக்கட்டுகள் ஆகிய வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.

இங்கு பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ( Multi utility facilities centre ), கனரக சரக்கு வாகன முனையம் ( Truck Terminal), தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது. சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ( Roads & Storm Water Drain and other Infrastructure facilities ) சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை அமையவுள்ளது.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 11 Dec 2022 9:57 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...