/* */

திருச்சி கண் மருத்துவமனையில் ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீஸ் விசாரணை

திருச்சி கண் மருத்துவமனையில் நடந்த ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி கண் மருத்துவமனையில் ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீஸ் விசாரணை
X

திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் உள்ள ஏ.ஜி.கண் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சிவக்குமார் (வயது 63). இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, "ஏ.ஜி.கண்மருத்துவமனை நிறுவனத்தில் நிதிக்கட்டுப்பாடு மற்றும் நிர்வாக பொறுப்புகளை புத்தூரை சேர்ந்த ஆனந்தராஜா (வயது 56) என்பவர் கவனித்து வந்தார்.இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதையடுத்து கடந்த 2018-ம்ஆண்டு நவம்பரில் நிறுவனத்தின் நிதிநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பல்வேறுநபர்களுக்கு நிறுவன பணத்தை கொடுத்ததாகவும், அதன் மூலம் ரூ.5கோடியே 92 லட்சத்து 96 ஆயிரத்து 888 ரூபாய் கையாடல் நடந்துள்ளதாகவும்தெரியவந்தது. ஆகவே போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

மேலும்,இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கைஎடுக்க உத்தரவிடக்கோரி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுஎண் 1-ல் மனுத்தாக்கலும் செய்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில், மாநகரகுற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன், ஆனந்தராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Nov 2021 8:15 AM GMT

Related News