திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருச்சி கிழக்கு தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம் ஜெயில் கார்னர் பகுதியில் இன்று நடந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள்  குறை தீர்க்கும் முகாம்
X

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  பொதுமக்களிடம்  மனுக்களை வாங்கினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெரும் குறை தீர்க்கும் முகாம் ஜெயில் கார்னர் பகுதியில் இன்று நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான குண்டும், குழியுமான சாலைகளை சீர்படுத்தி தரக் கோரியும், மழைக்காலங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் குளம்போல் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதை தடுத்து முறையான பாதாளசாக்கடை வசதியை ஏற்படுத்தி தரக் கோரியும், பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளை பழுது நீக்கீ புதுப்பித்து தர கோருவது உள்ளிட்ட தங்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக எழுதி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் வழங்கினர்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பேசுகையில்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 200 நாட்கள் ஆகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்ற முதல்வராக திகழ்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதனை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடத்தப்பட்ட முகாமில் தற்போது வரை 1533 கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக அளித்துள்ளனர்.

அதில் 512 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.‌ மீதமுள்ள மனுக்களுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். மேலும் இப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி புதுக்கோட்டை சாலை ஓரத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளின் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 25 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 2. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 3. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 4. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 5. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 6. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 7. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
 8. நாமக்கல்
  புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
 9. இராசிபுரம்
  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...
 10. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்