/* */

தனியார் பஸ் உரிமையாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆலோசனை

குற்ற சம்பவங்கள் தடுப்பு தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

தனியார் பஸ் உரிமையாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆலோசனை
X

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பு ஏற்றதில் இருந்து திருச்சி மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறார்.பேருந்துகளில் செயின்பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பிராச்சாரம் செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் மாநகர தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் பேருந்துகளில் குற்றச்சம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையர் சக்திவேல் கலந்து கொண்டார்.

மேலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தர்மராஜ் ,மோகன், மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் தனியார் பேருந்துகளில் நடைபெறும் திருட்டு, செயின்பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும், குடிபோதையில் பேருந்தின் நடத்துனர் ஓட்டுனர் மற்றும் பொதுமக்களை தாக்குதல் போன்ற சம்பவத்தில் எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள சி.சி.டி.வி. மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேற்படி சம்பவங்கள் நடக்காமல் இருக்க பேருந்துகளில் சி.சி.டி.வி. கண்டிப்பாக பொருத்த வேண்டும் எனவும், தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை அபாயகரமாக ஒட்டுவதை தவிர்க்க அறிவுரை கொடுக்கும்படியும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பேருந்தின் உரிமையாளருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது என்றார்.

அதனை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்தின் உரிமையாளர்கள் பேருந்தில் சி.சி.டி.வி. பொருத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து விரைவில் பேருந்தில் சி.சி.டி.வி. பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை நடத்துனரிடம் கொடுத்து குற்றம் நடைபெறாவண்ணம் பார்த்து கொள்வதாக தெரிவித்தனர்.

Updated On: 13 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?