/* */

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு நமது இந்திய திருநாட்டை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை மறுக்கப்பட்டது மட்டும் இன்றி இந்தியர்கள் சுயமாக தொழில் செய்யவும் முடியாத நிலை இருந்தது. தொழிலே செய்ய முடியாது என்ற நிலை இருந்தபோது கப்பல் ஓட்ட முடியுமா? முடியவே முடியாது. கடல் நீரில் விளையும் உப்பு காய்ச்சுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டால் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக உப்பு காய்ச்சும் போராட்டத்திற்காக தண்டியாத்திரை நடத்தினார்.

அந்த காலகட்டத்தில் எங்களாலும் கப்பல் ஓட்ட முடியும் என சாதித்து காட்டியவர் வ. உ. சிதம்பரனார். அதனால்தான் அவர் கப்பலோட்டிய தமிழன் என்று வரலாற்றில் போற்றப்படுகிறார். வழக்கறிஞரான அவர் தான் படித்த படிப்புக்கு ஏற்றபடி வழக்கறிஞர் தொழில் செய்திருந்தால் கோடீஸ்வரராக மாறி இருப்பார் .ஆனால் வரலாற்றில் இடம்பெற்றிருக்க முடியாது. ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கிய ஒரே தமிழன் மட்டுமல்ல ஒரே இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக வெள்ளைக்காரர்களின் அரசு சிதம்பரனாரை பிடித்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. கோவை சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? மாடுகள் பூட்டப்பட்ட செக்கினை இழுக்க வேண்டும் என்பதே. சிறைச்சாலையில் செக்கிழுத்து, கல் உடைத்து இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரன் அவர். சிறைச்சாலையிலேயே நோயால் பாதிக்கப்பட்டு தனது இன்னுயிரையும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இழந்தார்.

அவர் இழுத்த செக்கு இன்றும் சிறைச்சாலையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அவர் அன்று அப்படி உயிர் மூச்சை இழந்ததால் தான் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. கப்பலோட்டிய தமிழரான அவரது பெருமையை போற்றும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சிதம்பரனார் துறைமுகம் என பெயரிடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு இருந்தபோது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வ. உ. சிதம்பரனார் மாவட்டம் என பயிரிடப்பட்டு இருந்தது. இத்தகைய பெருமைக்குரிய வ. உ. சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று ஆகும்.

வ. உ. சிதம்பரனாரின் 86 வது நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு இன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் .இதைப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வ .உ .சிதம்பரனார் சிலைகளுக்கு காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சியினர், வ .உ. சி. பேரவையினர் அனைத்து வெள்ளாளர் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

அந்த வகையில்திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ. உ .சி. சிலைக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அருகில் நிர்வாகிகள் மலைக்கோட்டை முரளி, மைதீன், ஜங்சன் கோட்டம் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி சோசியல் மீடியா அபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...