/* */

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

திருச்சி கோர்ட்டில் நடந்து வரும் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி வழக்கு வருகிற 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
X

திருச்சி நீதிமன்றம் கோப்பு காட்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார்.

பிளாரன்ஸ் மேரி

இதனால் திருச்சியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கி இருந்து திருச்சி கல்லூரியில் இசை வகுப்பு பயின்று வந்தார். அப்போது திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கற்பழித்து விட்டதாகவும் இதில் கருவுற்ற தனக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜரத்தினம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாதிரியார்கள் ஜோஸ் சேவியர், தேவதாஸ், சேவியர் வேதம், பிளாரன்ஸ் மேரிக்கு கருக்கலைப்பு செய்த திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர் விசித்ரா என்பவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2010 களில் திருச்சியில் மட்டும் இன்றி தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கின் முதல் எதிரியான பாதிரியார் ராஜரத்தினம் மரணம் அடைந்து விட்டார். ஆதலால் மற்ற மூன்று பாதிரியார்களும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என ஐகோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் டாக்டர் விசித்ரா மீது மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இன்று திருச்சி மகிளா கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பிளாரன்ஸ் மேரி திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார். ஆனால் டாக்டர் விசித்ரா ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைக்கு பின்னர் பிளாரன்ஸ் மேரி கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அவர் திருமணம் செய்து கொண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Dec 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?