/* */

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
X

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகி உள்ள பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி உள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் கல்வி தரம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளை பெற்றோர்கள் தேடி வரும் நிலை உருவாகி உள்ளது. தமிழக அரசின் உள்ளாட்சி நிறுவனங்களால் அதாவது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஆகியவற்றினாலும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இன்னும் பல அரசு சார்ந்த நிறுவனங்களால் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கல்வி கட்டணம் மிகவும் குறைவு. இலவச கல்வி வழங்கப்படுவதுடன் மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறோமே என்ற கடமைக்கு வேலை பார்த்த காலம் மாறி போய் தற்போது அவர்கள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த அளவிற்கு பள்ளி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைககள் கறார் ஆக எடுக்கப்பட்டு வருகிறது.

கழிவறை போன்ற அடிப்படை வசதிக்கே அரசு பள்ளிகள் போராடிய காலம் மாறி போய் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஸ்மார்ட் வகுப்பறைகளாக உருமாறி உள்ளன.

ஆனால் அரசு சார்பில் கணினி வசதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் சிந்தனை உருவாகுவதற்கு முன்பாகவே திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மாரட் வகுப்பறைகளை உருவாக்கி காட்டியவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி. இவர் முன்மாதிரியாக உருவாக்கிய இந்த பள்ளி தான் திருச்சி மாநகராட்சியின் பல அரசு பள்ளிகளுக்கும் பின்னர் ரோல் மாடலாக இருந்தது. இவரது கல்வி சேவையை கல்வி துறை உயர் அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில் தற்போது இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஆர். பிரியதர்ஷன் மற்றும் ஆர். தேவதர்ஷன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி வடுகபட்டி ஹாக்கர்ஸ் கிளப்பில் தலைமைப் பயிற்சியாளர் பசூல் கரிம் என்பவரிடம் பயிற்சி பெற்று இந்த ஆண்டு நடைபெற்ற 32 - வது ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி அணிக்காக 11 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இவர்கள் இருவரும் பெங்களூருவில் டிசம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும் 60 - ஆம் ஆண்டு தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

பள்ளியின் சார்பில் மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுக்களையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 7 Dec 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி