/* */

திருச்சியில் நன்னடத்தை உறுதிமொழி மீறிய ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு

திருச்சியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் நன்னடத்தை உறுதிமொழி மீறிய ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு
X

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாநகரம் ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, அடிதடி, கொள்ளை, வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பிரேம் (எ) பிரேம் கண்ணன் (வயது 22 ) என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, ஏர்போர்ட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் மேற்படி பிரேம் (எ) பிரேம் கண்ணன்; நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொள்ளை வழக்கில் ஈடுபடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி பிரேம் (எ) பிரேம் கண்ணன் மீது ஏர்போர்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 278 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி பிரேம் (எ) பிரேம் கண்ணன் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 18 July 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...