/* */

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொன்மலை ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்  அஞ்சலி
X

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொன்மலை ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 275 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் மற்றும் மவுன அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோர ரயில் விபத்தில் அகால மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியும், படு காயமடைந்த பயணிகள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும், தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும், திருச்சி பொன்மலை இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பாகவும் இன்று மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மேற்படியான இரங்கல் நிகழ்ச்சியில் தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பணிமனை கோட்ட தலைவர் சகோதரர் பவுல் ரெக்ஸ் ,இரகுபதி, துணை பொதுச்செயலாளர் சேசுராஜா, தலைவர் பென்ஷனர் சங்கம், பொன்மலை ரெங்காசாரி, செயலாளர், பென்ஷனர் சங்கம், பொன்மலை ஏகாம்பரம், துணை தலைவர், ஜார்ஜ் ஸ்டீபன், பாலமுருகன், கோட்ட துணைத்தலைவர், ஞானசேகர்,உதவி கோட்ட செயலாளர், முகமது கோரி, உதவி கோட்ட செயலாளர் வெங்கட் நாராயணன் மற்றும் ஏராளமான முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் ரயில்வே குடும்பத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மெழுகுவரத்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 6 Jun 2023 8:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  5. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்