ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., நடந்தது எங்கே?

ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., இந்த சம்பவம் நடந்தது எங்கே என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., நடந்தது எங்கே?
X

அமைச்சர் நேரு முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கொள்ளிடம்  பாலத்தின் மதகு கட்டையில் ஏறி குதித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு சுமார் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு இன்று கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி சற்று தாமதமாக வந்தார். அமைச்சர் உள்ளிட்டோர் மதகின் மீது ஏறி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பாலத்திற்கு வந்த எம்.எல்.ஏ. பழனியாண்டியை பார்த்து அமைச்சர் நேரு நீயும் மேலே வா என அன்பாக ஆணையிட்டார். அமைச்சரின் ஆணையை தொடர்ந்து அங்கிருந்த தூணில் வேட்டியை மடித்துக்கொண்டு ஏறி உள்ளே வந்தார் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி. இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Updated On: 2022-08-05T09:33:01+05:30

Related News