/* */

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை
X

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.

திருச்சி பெரியகடைவீதி பக்கம் உள்ள வளையல் கார தெருவில் அமைந்துள்ளது சக்திமிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பால்குட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு 51வது ஆண்டு பால்குட திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பூக்களை சாத்தி வழிபாடு செய்தனர்.

விதவிதமான பூக்கள் அலங்காரத்தில் அம்மன் அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை காலை சிந்தாமணி காவிரி ஆற்றின் படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அதன் பின்னர் தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலரும் திருப்பணி குழு தலைவருமான கே‌.சி. ஆறுமுகம் மற்றும் இளைஞர் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்

Updated On: 10 March 2022 6:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்