திருச்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருச்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

திருச்சி பஞ்சப்பூர் அருகே கோரையாற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை  கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மணிவாசன் ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று (26.05.2023) மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சமத்துவபுரம் (சீரமைப்பு மற்றும் மீட்டுருவாக்கம்) திட்டப்பணிகள் குறித்தும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், இணைய வழி பட்டா மாறுதல், இணையவழி சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கம் மற்றும் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் பணிமுன்னேற்றம் குறித்தும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்திட்ட துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்தும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்ளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம், கோரையாற்றில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், திருவெறும்பூர் வட்டம், எல்லக்குடி கிராமம், உய்யக்கொண்டான் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மணிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறித்த நேரத்தில் முடித்திட நீர்வளத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் நித்தியானந்தன், தமிழ்ச்செல்வன், அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம் மண்டலத்திலிருந்து சிறப்பு...
  2. ஓமலூர்
    சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
  3. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  4. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  7. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  10. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்