உலக அஞ்சல் வாரம் உருவானது எப்படி? திருச்சி நிகழ்ச்சியில் தகவல்

உலக அஞ்சல் வாரம் உருவானது எப்படி? என்பது பற்றி திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உலக அஞ்சல் வாரம் உருவானது எப்படி? திருச்சி நிகழ்ச்சியில் தகவல்
X

திருச்சியில் உலக அஞ்சல் வாரம் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை திருச்சிராப்பள்ளி கோட்டம் தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் சார்பில் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அஞ்சல் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் கடைபிடிக்கப்பட்டது.

ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி இயக்குனர் அபர்ணா தலைமை வகித்தார் தலைமையாசிரியை மீனா முன்னிலை வகித்தார். தெப்பக்குளம் தபால் நிலைய அதிகாரி விஜயலட்சுமி, உதவி அஞ்சல் அதிகாரி சுமதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஜம்புநாதன்,பெண் தபால்காரர் ஷாலினி, உதவியாளர் பால மணிகண்டன், பள்ளி உதவி தலைமை ஆசிரியை மல்லிகா,ஆசிரியை கோமதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சியில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி, சதீஷ் , யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர்

பாதுகாக்கப்பட்ட கடிதம் மற்றும் அஞ்சல் அட்டைகளின் பொக்கிஷமான நினைவுகளை எடுத்துரைத்தனர். பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பு கொண்ட கடிதங்கள், பொது பயன்பாடு அஞ்சல்தலை, நினைவார்த்த அஞ்சல்தலை, குறுவடிவ அஞ்சல் தலை, மற்றும் அப்போலோ சோயஸ் வான்வெளி பயணம் குறித்து அஞ்சல்தலை சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அஞ்சல்தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அஞ்சல் வாரம் குறித்து பேசுகையில்,

சுவிஸ் தலைநகர் பெர்னேயில் 1874 இல் யுனிவர்சல் தபால் யூனியன் நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. 1969 இல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற யு.பி.யு. காங்கிரஸால் இது உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர், தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக அஞ்சல் தினத்தின் நோக்கம் மக்கள் மற்றும் வணிக வாழ்க்கையில் தபால் துறையின் பங்கு மற்றும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

கோவிட் -19 இன் போது, ​​உலகெங்கிலும் உள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தபால் துறை பெரும் பங்கு வகித்தது. இந்திய அஞ்சல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 முதல் 15 வரை தேசிய அஞ்சல் வாரத்தை கொண்டாடுகிறது . இந்த கொண்டாட்டம் இந்திய அஞ்சலின் பங்கு மற்றும் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

தெப்பக்குளம் தபால் நிலைய அதிகாரி விஜயலட்சுமி பேசுகையில்,

தேசிய அஞ்சல் வார விழாவில் உலக அஞ்சல் தினம், வங்கி தினம்,அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நாள்,தத்துவ நாள், வணிக மேம்பாட்டு நாள்,அஞ்சல் தினம் என அந்தந்த நாட்களில் இந்த தேசிய அஞ்சல் வாரத்தின் போது கடைபிடிக்கப்படுகிறது. தபால் மையங்களில் குடிமக்கள் சார்ந்த சேவைகள் கிடைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா,பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ஆதார் பதிவு , புதுப்பித்தல் வசதி, பி.ஆர்.எஸ், அஞ்சல் வங்கி, அஞ்சல் காப்பீடு மற்றும் அஞ்சல் துறை சேவைகள் பற்றி குறிப்பிட்டார்.அஞ்சல் துறை குறித்த குறும்பட காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.

Updated On: 13 Oct 2021 6:37 AM GMT

Related News