/* */

திருச்சியில் வனம் சார்ந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

திருச்சியில் வனம் சார்ந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் வனம் சார்ந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
X

திருச்சி மாவட்ட வன அதிகாரி கிரண் தலைமையில் வனம் சார்ந்த விவசாயிகளுக்கான பிரச்சினைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் வனம் சார்ந்த விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி வனபாதுகாவலர்கள் சம்பத்குமார், சரவணகுமார், மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா மற்றும் அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் வனபகுதிகள் உள்ள மற்றும் மலைகுன்றுகள் உள்ள பகுதிகள் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடியாகும் விவசாய நிலங்களிலும்,குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் காட்டுமாடுகள்,குரங்குகள்,மயில்கள்,மான்கள்,காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உட்புகுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள்,காய்கறிகள்,கிழங்கு வகைகளை அழித்து நாசம் செய்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.குடியிருப்புக்குள் புகுந்தும் வயல்களுக்கு செல்லும் விவசாயிகள்,இரவு நேரங்களில் சாலைகளில் செல்வோா்களையும் உயிருக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தும் வகையில் கொடூரமாக தாக்கி வருகிறது.இப் பகுதிகளில் பொது மக்கள் தினம்,தினம் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக மண்ணச்சநல்லூா் வட்டத்தில் தத்தமங்கலம்,வீராணி,ஓமாந்தூா்,எதுமலை,வாலையூா்,பாலையூா்,பெரகம்பி,திருப்பட்டூா்,சனமங்கலம் மற்றும் இதன் சுற்றுபுற கிராம பகுதிகள், மணப்பாறை வட்டத்தில் ,பாலமலை ,குறுமலை பகுதிகளில் உள்ள குப்பணாபட்டி,குறுப்பணைகுளம்,சிட்டுகுருவி நாயக்கன்பட்டி,வடக்கு இடையபட்டி,புத்தநத்தம்,மலையாண்டி கோவில் பகுதிகள்,பொய்கை மலை பகுதியில் கீழ பொய்கை பட்டி உள்ளிட்ட சுற்று வட்டா பகுதிகள்,

மருங்காபுரி வட்டத்தில் கஞ்சநாயக்கன்பட்டி,கலுவாடிமலை பகுதிகளில் வடக்குஎல்லகல்பட்டி,கொசுவமலை,பாறைகுளம், பில்லுப்பட்டி கொற்ற மலைபகுதியை ஒட்டிவுள்ள அடைக்கன்பட்டி,மருங்காபுரி ,முத்தாழ்வாா் மலைபகுதியில் முடுக்குபட்டி பகுதிகள்,

உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியில் கொல்லிமலை,பச்சமலை பகுதிகளை அருகாமையில் உள்ள தளுகை,நாகநல்லூா்,சோபனபுரம்,கொப்பம்பட்டி,வெங்கஜலபுரம்,ஒக்கரை,ஆங்கயம்,அழகாபுாி,பச்சபெருமாள்பட்டி,ஆலத்துடையான்பட்டி,வைாிசெட்டிபாளையம்,கோட்டபாளையம்,மாராடி,எரகுடி,காமாட்சிபுரம்,எ.பாதா்பேட்டை,சிறுநாவலூா் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளும்,

பாலகிருஷ்ணன்பட்டி,ஊப்பிலியபுரம் பேரூராட்சி பகுதிகளும் முசிறிவட்டத்தில் புலிவலம் வனபகுதியை ஒட்டியுள்ள முவாணூா்,வேங்கைமண்டலம்,குருவிகாரம்பலம்,பெரமங்கலம்,மண்பறை,திருத்தியமலை,அய்யம்பாளையம்,கண்ணுகூளம்,காட்டுக்குளம் ,தண்ணீா்பந்தல், தா.பேட்டை ஒன்றிய பகுதியில் சக்கம்பட்டி ,தேவாரம்பட்டி,கல்லுகுடி,காவோிபட்டி பகுதிகள் இதன் சுற்று வட்டார பகுதிகள் வனவிலங்குகளால் பொிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வரும் நிலையில் தற்போது மாவட்டத்தில் அந்தநல்லூா்,மணிகன்டம்,லால்குடி,தொட்டியம்,திருவம்பூா் பகுதிகளிலும் மயில்கள்,குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லைகளை கொடுத்து வருகின்றன.

மாவட்ட நிா்வாகம் இப் பிரச்சணைகளுக்கு கீழ்க் கண்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொன்டு சென்று விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

1.வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்,பொது மக்களுக்கும் உாிய நிவாரணங்கள்,வழங்க வேண்டும்.

2−இப் பகுதிகளில் உள்ள வேளாண் பயிா்களுக்கு பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற வழி வகை செய்ய வேண்டும்.

3−வன விலங்குகள் வனம் மற்றும் மலை பகுதியை விட்டு வெளியே வராத அளவிற்கு வனம்,மற்றும் மலை பகுதிகளை சுற்றி அகழிகள் அமைத்தோ,குறைந்தழுத்த சூாிய மின்வேலி அமைத்தோ தடுக்க வேண்டும்.

4−வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீா்தொட்டிகள் அமைத்து தருவதுடன் உணவு தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அந்தந்த பகுதிகளில் செடி,கொடிகள்,பயிா்வகைகளை பயிாிட வேண்டும்.

5−காட்டுபன்றிகளை சுட விவசாயிகளுக்கு அனுமதி பெற்ற தரவேண்டும்.

6−மான்கள்,மயில்கள் குரங்குகளுக்கு அந்தந்த பகுதிகளில் சரணாலயங்கள் அமைத்து பராமாிக்க வேண்டும்.

7−மண்ணச்சநல்லூா் எம்.ஆா் பாளையம், வனவிலங்கு உயிாியல் பூங்காவை விாிவு வடுத்தி வனவிலங்குகளை பராமாிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9−பொது மக்கள் பங்களிப்புடன் வனவிலங்குகளை பராமாிக்க ஶ்ரீரங்கம்,திருவாணைகோவில் ,சமயபுரம்,வயலூா் உள்ளிட்ட பொிய பொிய கோவில்களிலும்,முக்கொம்பு,வண்ணத்து பூச்சி பூங்கா போன்ற சுற்றுலா தளங்களிலும் கூன்டுகள் அமைத்து மயில்கள்,மான்,குரங்குகளை பாதுகாத்திட வேன்டும்.

10−வனப்பகுதியில் செயல்பட்டு வந்த வன குழுக்குழுக்களை புதுப்பித்து மீண்டும் செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 6 Oct 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது