/* */

திருச்சியில் கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்,திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பணம் செல்போன் பறிப்பு,கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும்,தணிக்கைசெய்ய காவல்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இதில் திருச்சி மாநகரம் பொன்மலை போலீஸ் எல்லைக்குட்பட்ட பொன்மலைப்பட்டி மயூரா பேக்கரி முன்பு கடந்த 15.09.21-ஆம்தேதி சின்ராஜ் (வயது24)என்பவரை முன்பகை காரணமாக ரவுடியானஅலெக்ஸ் (என்கிற) அலெக்ஸ்சாண்டர் (வயது 26) மற்றும் ரத்தினசாமி (வயது 22), ஆகியோர் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டகுற்றவாளி அலெக்ஸ் (எ)அலெக்ஸ்சாண்டர் என்பவர் மீது திருச்சி மாநகரில் 4 வழக்குகள் பதிவுசெய்தும், பல்வேறு காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து நிலுவையில்உள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, மேற்படி அலெக்ஸ் (எ) அலெக்எஸ்சாண்டர் மற்றும் சரத் (எ)ரத்தினசாமி ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையைதடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்தஅறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், இந்த குற்றவாளிகளை குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இரண்டு பேரிடமும் குண்டர் தடுப்பு சட்ட ஆணை சார்வு செய்யப்பட்டது.

Updated On: 13 Nov 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?